மாவட்டத்தில்: வெவ்வேறு விபத்துகளில் 2 தொழிலாளர்கள் பலி


மாவட்டத்தில்: வெவ்வேறு விபத்துகளில் 2 தொழிலாளர்கள் பலி
x
தினத்தந்தி 28 Nov 2018 3:30 AM IST (Updated: 28 Nov 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கதிரிபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 34). இவருடைய உறவினர் கோவிந்தராஜ் (27). தொழிலாளிகளான இவர்கள் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் காவேரிப்பட்டணம்-பாலக்கோடு சாலையில் இந்திரா நகர் அருகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வேன் ரமேஷ் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் ரமேசும், கோவிந்தராஜூம் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார். கோவிந்தராஜ் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா திம்மச்சூர் பாஞ்சாலி கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (55) தொழிலாளி. இவர் சூளகிரி பகுதியில் கூலி வேலைக்காக வந்திருந்தார். இந்த நிலையில் அவர் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே கொல்லப்பள்ளி பக்கமாக சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story