சேலத்தில்: கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை


சேலத்தில்: கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 28 Nov 2018 3:15 AM IST (Updated: 28 Nov 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்,

சேலம் செவ்வாய்பேட்டை தாண்டவராயன் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 55). தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இந்த நிலையில் ரவிக்கு போதிய வருமானம் இல்லை. இதனால் சிலரிடம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய கடனை அவரால் திரும்ப கட்ட முடியவில்லை.

கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப தரக்கோரி ரவியிடம் கேட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை திரும்பவும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டதாக கூறப்படுகிறது.

கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர் வீட்டிற்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். இதைப்பார்த்த அவரது மனைவி சாந்தி சத்தம் போட்டார். இதைகேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, வீட்டுக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது ரவி தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக இறந்தார். இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் தொல்லையால் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story