கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொன்னமராவதி பகுதியில் குடிநீர் இன்றி பொதுமக்கள் தவிப்பு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொன்னமராவதி பகுதியில் குடிநீர் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை,
கடந்த 16-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் கோரதாண்டவம் ஆடிய கஜா புயலில் இருந்து மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மின்கம்பங்கள், தென்னை மரங்கள் உள்பட பல்வேறு வகையான மரங்கள் சாய்ந்தன. இதேபோல பலர் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மனிதநேயத்துடன் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகாவில் ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள், சுமார் 80 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த வாழை மரங்கள், 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், 15-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்திருந்த கரும்புகள், 6 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த காய்கறிகள், 31 ஏக்கர் எலுமிச்சை மரங்கள், சவுக்கு மரங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மா மரங்கள், 200-க்கும் மேற்பட்ட பலா மரங்கள் உள்பட பல்வேறு வகையான மரங்கள் வேரோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அத்துடன் ஏராளமான மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் போன்றவைகளும் சாய்ந்து சேதமடைந்தன. தற்போது பொன்னமராவதி தாலுகாவில் உள்ள ஒரு சில கிராமங்களை தவிர பெரும்பாலான கிராமங்களுக்கு இரவில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின்சாரம் வழங்கப்படாத கிராமங்கள் மீட்பு பணியில் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் குடிநீர் இன்றி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
குறிப்பாக பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சடையம்பட்டி, ஒலியமங்கலம், சித்தூர், சுந்தம்பட்டி, நல்லூர், தேவர் அம்மாப்பட்டி, ஆலவயல், மறவாமதுரை உள்பட பல கிராம மக்கள் குடிநீர் இன்றி அவதி அடைந்து வருகின்றனர். இவர் கஜா புயலின் போது பெய்த மழையின் காரணமாக பள்ளங்கள் மற்றும் குளங்களில் உள்ள தண்ணீரை பிடித்து வீட்டிற்கு கொண்டு சென்று, அந்த தண்ணீரில் துணி துவைப்பது, குளிப்பது, பாத்திரங்களை கழுவுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரும்பாலான கிராமங்களை சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதியில் உள்ள குளங்களில் உள்ள தண்ணீரில் குளித்து வருகின்றனர். பெரும்பாலான கிராமங்களில் அரசு ஊழியர்களை எதிர்பார்க்காமல் சாலையில் கிடந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும் வீடு சேதமடைந்தவர்கள் தற்போது பக்கத்தில் கடன் வாங்கி தங்களது வீட்டை சீரமைத்து உள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் கரையை கடந்த 12 நாட்கள் ஆகிறது. ஆனால் இதுவரை எங்களுக்கு முறையாக குடிநீர் கிடைக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு தான் எங்கள் கிராமங்களுக்கு இரவில் மின்சாரம் வந்து உள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் வேலை நடைபெற்று வருவதால், காலையில் மின்சாரத்தை நிறுத்தி விடுகின்றனர்.
புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி போன்ற பெரிய நகரங்களில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் லாரிகளில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் எங்கள் கிராமங்களுக்கு லாரிகளில் குடிநீர் வழங்கவில்லை. இதனால் நாங்கள் குடிநீருக்காக அலைந்து திரிந்து வருகிறோம். மேலும் பாத்திரங்களை கழுவுவதற்கும், துணிகளை துவைப்பதற்கும், குளிப்பதற்கும் தண்ணீர் இல்லாததால், புயலின் போது பெய்த மழையின் காரணமாக பள்ளங்கள் மற்றும் குளங்களில் தேங்கிய தண்ணீரை குடங்களில் பிடித்து வந்து, அந்த தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சில கிராமங்களில் மட்டும் ஜெனரேட்டர் மூலம் குடிநீரை மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர். இதேபோல அனைத்து கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தினமும் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்கள்.

Related Tags :
Next Story