அடுத்த மாத இறுதியில் நேரல் - மாதேரான் இடையே கூடுதலாக 2 டாய் ரெயில் சேவை
மும்பையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் மாதேரான் மலைவாசஸ்தலம் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் மாதேரானின் அழகை காண வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர்.
மும்பை,
பொதுமக்களின் வசதிக்காக, மத்திய ரெயில்வே நேரல் - மாதேரான் இடையே டாய் ரெயில்களை இயக்கி வருகிறது. தற்போது தினமும் 6 ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், இந்த வழித்தடத்தில் அடுத்த மாத இறுதியில் இருந்து கூடுதலாக 2 டாய் ரெயில் சேவைகளை இயக்க மத்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கூடுதல் டாய் ரெயில்களை இயக்குமாறு பயணிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. அதன் பின்னர் தான் கூடுதல் சேவைகளை இயக்க முடிவு செய்தோம்’’ என்றார்.
Related Tags :
Next Story