தொழில் அதிபரை மிரட்டியதாக அபு ஆஷ்மி எம்.எல்.ஏ. மீது புகார்


தொழில் அதிபரை மிரட்டியதாக அபு ஆஷ்மி எம்.எல்.ஏ. மீது புகார்
x
தினத்தந்தி 28 Nov 2018 3:37 AM IST (Updated: 28 Nov 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

மும்பை கொலபா பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் நசிர் ஜமால். அண்மையில் இவரது அலுவலகத்திற்கு சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வின் மெய்காவலர்கள் சிலர் வந்திருந்தனர்.

மும்பை,

சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வின் மெய்காவலர்கள் அந்த அலுவலகம் இனி அபு ஆஷ்மிக்கு சொந்தமானது. எனவே உடனடியாக அதை காலி செய்து விட வேண்டும் என தொழில் அதிபர் நசிர் ஜமாலை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி உடனே அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, அபு ஆஷ்மியின் மெய்காவலர்களை போலீஸ் நிலையத்திற்கு பிடித்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தொழில் அதிபர் நசிர் ஜமால், அபு ஆஷ்மி எம்.எல்.ஏ. மற்றும் அவரது மெய்காவலர்கள் மீது புகார் கொடுத்தார். அந்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story