பேராவூரணி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 113 டன் அரிசி வினியோகம் அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
பேராவூரணி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 113 டன் அரிசி தொடர்ந்து வினியோகம் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
தஞ்சாவூர்,
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்குவதற்காக பேராவூரணிக்கு கொண்டு வரப்பட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து பேராவூரணி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நிவாரண பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பான ஆலேசானை கூட்டம் பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் பேரூராட்சிகள் இயக்குனர் பழனிசாமி, கண்காணிப்பு அதிகாரி மேகநாத் ரெட்டி, மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, ஐ.ஏ.எஸ். அதிகாரி கிராந்தி குமார், வருவாய் அதிகாரி அனுசுயாதேவி ஆகியோருடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:- தூத்துக்குடி, நாமக்கல், சென்னை, திருப்பூர், குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நிவாரண பொருட்கள் பேராவூரணிக்கு வந்து கொண்டிருக்கிறது.
பிரதான சாலையில் அமைந்துள்ள பகுதிகள் மட்டுமல்லாது, 91 கிராமங்களுக்கும், பேரூராட்சி பகுதிகளுக்கும் மின் இணைப்புகள் வழங்க கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பேராவூரணி தொகுதிக்கு உட்பட்ட பகுதிக்கு மட்டும் 1,500 மின்வாரிய பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு இரவு, பகலாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
பேராவூரணி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் புதிதாக அமைப்பதற்கு தேவையான மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல பாதிக்கப்பட்ட மக்களுக்கு 113 டன் அரிசி, 10 ஆயிரம் சேலைகள், 2 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய், குழந்தைகளுக்கு தேவையான பிஸ்கட், பால் பவுடர், 4 ஆயிரம் வேட்டிகள், 2 ஆயிரம் சட்டைகள், கைலிகள், பெட்ஷீட்டுகள், பாய், தண்ணீர் பாட்டில்கள், ரவை, கோதுமை மாவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தேவையான பொருட்களை மக்களுக்கு உடனுக்குடன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Tags :
Next Story