கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முசிறி சட்டமன்ற தொகுதியில் இருந்து ரூ.10 லட்சம் நிவாரண பொருட்கள்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முசிறி சட்டமன்ற தொகுதியில் இருந்து ரூ.10 லட்சம் நிவாரண பொருட்கள்
x
தினத்தந்தி 28 Nov 2018 4:24 AM IST (Updated: 28 Nov 2018 4:24 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முசிறி சட்டமன்ற தொகுதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

முசிறி,

கஜா புயலால் புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இதையடுத்து முசிறி சட்டமன்ற தொகுதி சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, சோப்புகள், வேட்டி, சேலைகள், பாய், மெழுகுவர்த்தி, பிஸ்கட் பாக்கெட்டுகள், ரொட்டிகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக லாரி மூலம் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து முசிறி தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் தலைமையில், புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் எம்.பி. கொடியசைத்து நிவாரணப்பொருட்கள் ஏற்றிச்சென்ற லாரியை அனுப்பி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. ஒன்றிய, நகர செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.



Next Story