மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை - கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி அறிவிப்பு
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்தார். அப்போது, “மேகதாது திட்ட சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக அரசின் மிக முக்கியமான திட்டம் இது ஆகும். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல.
தமிழகத்திற்கு எந்த பிரச்சினையும் ஏற்படாத வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மாநிலத்தின் எல்லையில் இந்த அணையை கட்டுவதால், இந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த மாட்டோம். கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரில் எந்த பாதிப்பும் இருக்காது.
தேவைப்பட்டால் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். இது தொடர்பாக வருகிற 6-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்” என்றார்.
Related Tags :
Next Story