டிஜிட்டல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் குக்கர்
பலவிதமான பணிகளை ஒருங்கே செயல்படுத்தும் மின்சாரத்தில் இயங்கும் டிஜிட்டல் குக்கரை ஆர்.என்.ஜி. எகோ கிரீன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அரிசி உணவு சமைப்பதற்கு மட்டுமின்றி பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டது. டிஜிட்டல் தொடுதிரை கொண்டது. இதில் எந்த உணவுக்கு எவ்வளவு வெப்பம் தேவை என்பதை தீர்மானித்து சிறப்பான சுவை மிகு உணவு தயாரிக்க உதவும். பயணத்தின்போதும் எடுத்துச் செல்லலாம். இதில் 16 வகையான உணவுகள் தயாரிப்பதற்கான வசதிகள் உள்ளன. மூன்று பகுதிகளிலும் வெப்பம் பரவுவதால் உணவு விரைவிலேயே தயாராகிவிடும். அத்துடன் ஒரே சீராக உணவு வேகும். சமைத்த உணவு நீண்ட நேரம் வரை சூடு குறையாமல் இருக்கவும் இது உதவுகிறது. இதன் விலை ரூ.4,999 ஆகும்.
Related Tags :
Next Story