ஒளிந்திருக்கும் கேமராவை கண்டுபிடிக்கும் கருவி
ஸ்பை பைண்டர் என்னும் இந்த கருவி, கேமரா எவ்வளவு சிறியதாக இருந்தாலும் கண்டுபிடித்து விடும்.
சமீப காலங்களில் உடை மாற்றும் அறைகளிலும், விடுதிகளிலும், பொதுக்கழிப்பறைகளிலும் திருட்டுத்தனமாக பெண்களை வீடியோ எடுக்கும் இழிவான செயலை சிலர் செய்து வருகின்றனர். மிகச் சிறிய அளவு கேமராக்களை கண்டுபிடிப்பது கடினம். இனி பெண்களுக்கு இந்த அச்சம் தேவையில்லை. ஏனெனில் ஸ்பை பைண்டர் என்னும் இந்த கருவி, கேமரா எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதை கண்டுபிடித்து விடும்.
பாக்கெட்டில் வைத்து கொள்ளும் அளவு மட்டுமே இருக்கும் இந்த சாதனம் உபயோகிக்க மிகவும் எளிதானது. இதில் இருக்கும் ஒற்றை பொத்தானை அழுத்தினால் எல்.இ.டி. வெளிச்சத்தை உமிழும். இதன் லென்ஸ் மூலம் அறையை சுற்றிலும் நோட்டம் விட்டால் மூலை முடுக்குகளில் பதுங்கி இருக்கும் கேமராக்களை கண்டுபிடித்து காட்டும்.
கேமரா இருக்கும் இடம் பளிச்சென்று ஒளிரும். மூன்று முதல் நாற்பத்தைந்து அடி வரை இந்த ஸ்பை பைண்டர் கருவியை உபயோகிக்கலாம்.
குறைவான வெளிச்சம் இருக்கும் போது அறைகள் மட்டுமின்றி அவுட்டோரிலும் பயன்படுத்தலாம். பேட்டரியில் இயங்கும் இந்தக் கருவியின் விலை 248 அமெரிக்க டாலர்கள்.
Related Tags :
Next Story