நார்டன் சூப்பர்லைட் மோட்டார் சைக்கிள்
இங்கிலாந்தைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான நார்டன் தனது புதிய மாடல் நார்டன் சூப்பர்லைட் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.
முந்தைய தயாரிப்பான அட்லஸ் மாடலைப் போன்ற தோற்றத்துடன் 650 சி.சி. திறனுடன் வந்துள்ளது. இதன் முன்பாதி என்ஜின் 1200 சி.சி. வி4 ஆர்.ஆர். என்ஜினைப் போன்ற தோற்றத்துடன் உள்ளது. இதன் போர் 82 மி.மீ. அளவில் இருப்பதால் ஒவ்வொரு சிலிண்டரிலும் கூடுதலாக தலா 25 சி.சி. திறன் வெளிப்படுகிறது. அகலமான போர் இருந்தபோதிலும் குறுகிய இடைவெளியில் அதிக விசையை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் 105 ஹெச்.பி. 12,500 ஆர்.பி.எம். மற்றும் 75 நியூட்டன் மீட்டர் திறனை வெளிப்படுத்துகிறது. பந்தயத்துக்கான மோட்டார் சைக்கிளாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்புற கிளஸ்டரில் உள்ள 7 அங்குல திரை வாகனத்தின் செயல்பாடுகளை துல்லியமாகக் காட்டும்.
இந்த மோட்டார் சைக்கிளின் பெரும்பாலான பாகங்கள் மற்றும் பெட்ரோல் டேங்க் முற்றிலும் கார்பன் பைபரால் ஆனது. இதனால் பார்ப்பதற்கு பிரமாண்டமான தோற்றம் கொண்ட இந்த மோட்டார் சைக்கிளின் எடை 158 கிலோ மட்டுமே. இந்த மோட்டார் சைக்கிளின் தனித்துவ அடையாளமே இரட்டைக் குழல் சேஸிஸ்தான். அத்துடன் இதில் பிரெம்போ நிறுவனத்தின் 330 மி.மீ. டிஸ்க் பிரேக் இரண்டு சக்கரங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் முழுமையான டைட்டானியம் எக்ஸாஸ்ட் இருப்பதால் 6 ஹெச்.பி. திறன் கூடுதலாக வெளிப்படுகிறது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ.18.30 லட்சமாகும்.
Related Tags :
Next Story