ஆட்டோமேடிக் கியர் வசதியுடன் புதிய எர்டிகா


ஆட்டோமேடிக் கியர் வசதியுடன் புதிய எர்டிகா
x
தினத்தந்தி 28 Nov 2018 3:40 PM IST (Updated: 28 Nov 2018 3:40 PM IST)
t-max-icont-min-icon

மாருதி சுஸுகி தயாரிப்புகளில் எர்டிகா மாடலுக்கு சமீப காலமாக அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. எஸ்.யு.வி. ரகமாக வந்துள்ள இந்த மாடலில் தற்போது ஆட்டோமேடிக் கியர் வசதியுடன் இரண்டு மாடல்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மல்டி பர்பஸ் வெஹிகிள்ஸ் (எம்.பி.வி.) ரகமாக இது வந்துள்ளது. இதன் அடுத்த தலைமுறை மாடல் நான்கு கியர்களுடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டது. இது 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. இதே பிரிவில் மொத்தம் 10 மாடல்களை சுஸுகி அறிமுகம் செய்ய உள்ளது.

பெட்ரோலில் இயங்கும் அதேசமயம் கியர், கிளட்ச் கொண்ட மாடல், அடுத்தது இரண்டு ஆட்டோமேடிக் கியர் மாடல் மற்றும் நான்கு டீசல் கியர், கிளட்ச் மாடல் கார்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. புதிய எர்டிகா மாடலில் புரொஜெக்டர் முகப்பு விளக்கு மற்றும் பகலில் ஒளிரும் எல்.இ.டி. விளக்கு இதன் சிறப்பம்சமாகும். பின்புற விளக்குகளில் எல்.இ.டி. விளக்குகளும் உள்ளன.

இதில் இரட்டை பேட்டரி பயன்பாடு உள்ளது. இதில் ஆசிட் உள்ள பேட்டரி கார் ஸ்டார்ட் மற்றும் ஆப் உள்ளிட்ட பயன்பாட்டுக்கு மட்டும் உபயோகப்படும். அடுத்து உள்ள லித்தியம் அயன் பேட்டரி என்ஜின் டார்க் அளவு அதிகரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படும். இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இது 105 ஹெச்.பி. திறன் மற்றும் 138 நியூட்டன் மீட்டர் டார்க் அளவை வெளிப்படுத்தக் கூடியது. அதேபோல டீசல் என்ஜின் 1.3 லிட்டர் கொண்டது. இது 5 கியர்களைக் கொண்டது.

புதிய எர்டிகா மாடல் அதிக இடவசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலில் இடவசதி 185 லிட்டராகும். புதிய மாடலில் 209 லிட்டரைக் கொண்டதாக வந்துள்ளது.

Next Story