தூத்துக்குடியில் 30–ந்தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
தூத்துக்குடியில் நாளை (வெள்ளிக்கிழமை) எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நாளை (வெள்ளிக்கிழமை) எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–
குறைதீர்க்கும் நாள் கூட்டம்தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சங்கு கூடத்தில் காலை 11 மணிக்கு நடக்க உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு சிலிண்டர் வினியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்துக் கொள்கிறார்கள். எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுக்கலாம்.
குறைகள்பெயர் மாற்றம், புதிய எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் கால தாமதம், எரிவாயு வினியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெப்பாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல், எரிவாயு சிலிண்டர்களை வினியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் இந்த கூட்டத்தில் தெரியப்படுத்தலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.