விவசாயிகள் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் எச்சரிக்கை


விவசாயிகள் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 Nov 2018 3:00 AM IST (Updated: 28 Nov 2018 5:43 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

களக்காடு, 

விவசாயிகள் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மின்வேலிகள்

நெல்லை மாவட்டம் களக்காடு மலையடிவார பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் சமீபகாலமாக வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க சட்டவிரோதமாக மின்சார வேலிகள் அமைக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி கடமானும், காட்டு பன்றியும் உயிரிழந்தன. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி தோட்ட மேலாளர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

கடும் நடவடிக்கை

மேலும் இதுகுறித்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் கூறுகையில், சமீபகாலமாக தோட்டங்களில் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வருகின்றன. அதனை கண்காணிக்க வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறை ஊழியர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் இவர்கள் இரு குழுக்களாக பிரிந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் மலையடிவார பகுதி தோட்டங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோதமாக மின்வேலி அமைப்பதால் அதில் வனவிலங்குகள் மட்டுமின்றி விவசாயிகளும் சிக்கி உயிரிழக்கும் நிலை உள்ளது.

எனவே விவசாயிகள் சட்டவிரோதமாக மின்வேலி அமைப்பதை தவிர்க்க வேண்டும். மின்வேலி அமைப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.


Next Story