வாசுதேவநல்லூர் அருகே ஆயிரம் வாழைகள் வெட்டிச் சாய்ப்பு தந்தை– மகன்கள் மீது வழக்குப்பதிவு


வாசுதேவநல்லூர் அருகே ஆயிரம் வாழைகள் வெட்டிச் சாய்ப்பு  தந்தை– மகன்கள் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 29 Nov 2018 3:30 AM IST (Updated: 28 Nov 2018 7:41 PM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் அருகே ஆயிரம் வாழைகள் வெட்டி சாய்க்கப்பட்டது. இதுதொடர்பாக தந்தை, மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வாசுதேவநல்லூர், 

வாசுதேவநல்லூர் அருகே ஆயிரம் வாழைகள் வெட்டி சாய்க்கப்பட்டது. இதுதொடர்பாக தந்தை, மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வாழைகள் வெட்டிச் சாய்ப்பு 

வாசுதேவநல்லூர் அருகே உள்ள சங்கனாப்பேரி பாறைசாலை தெருவை சேர்ந்தவர் நடராஜன். அவருடைய மனைவி சரஸ்வதி (வயது 36). வாசுதேவநல்லூர் பழைய பஸ்நிலையத்துக்கு அருகே திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான நிலத்தில் ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் செய்து வருகிறார். தற்போது அங்கு வாழை பயிரிட்டுள்ளார். அந்த இடத்தின் அருகே பழைய பஸ்நிலையம் தெற்கு தெருவை சேர்ந்த சொரிமுத்து (59) என்பவரின் சகோதரருக்கு சொந்தமான நிலமும் உள்ளது. இதனை சொரிமுத்து பராமரித்து வருகிறார். மேலும் அவர் சரஸ்வதி விவசாயம் செய்வதற்கு அவ்வப்போது இடையூறுகள் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டு சொரிமுத்து மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சரஸ்வதி பயிரிட்டிருந்த ஆயிரம் வாழைகள் வெட்டி சாய்க்கப்பட்டன. இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசில் சரஸ்வதி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சொரிமுத்து மற்றும் அவருடைய மகன்கள் செந்தில்பாண்டி, நடராஜன் ஆகியோர் சரஸ்வதி பயிரிட்டிருந்த வாழைகளை வெட்டி சாய்த்தது தெரியவந்தது.

தந்தை–மகன்கள் மீது வழக்குப்பதிவு 

இதுதொடர்பாக அவர்கள் 3 பேர் மீதும், சப்–இன்ஸ்பெக்டர் திருமலைச்சாமி வழக்குப்பதிவு செய்தார். புளியங்குடி துணை சூப்பிரண்டு சக்திவேல் மேல் விசாரணை நடத்தி வருகிறார். சொரிமுத்து தென்காசியில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story