தூத்துக்குடி மாவட்டத்தில், நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்


தூத்துக்குடி மாவட்டத்தில், நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
x
தினத்தந்தி 29 Nov 2018 3:00 AM IST (Updated: 28 Nov 2018 8:37 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

அம்மா திட்ட முகாம் 

அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசு சார்பில் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அந்தந்த தாசில்தார் தலைமையில் நடத்தப்படுகிறது. இந்த வாரத்துக்கான முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இடங்கள் 

இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா சங்கரப்பேரியிலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா கொங்கராயகுறிச்சியிலும், திருச்செந்தூர் தாலுகா ஆத்தூர் கஸ்பாவிலும், சாத்தான்குளம் தாலுகா நடுவக்குறிச்சியிலும், கோவில்பட்டி தாலுகா சிவந்திபட்டியிலும், விளாத்திகுளம் தாலுகா குமாரசித்தன்பட்டியிலும், எட்டயபுரம் தாலுகா அயன்கரிசல் குளத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகா கே.சண்முகபுரத்திலும், கயத்தாறு தாலுகா அகிலாண்டபுரத்திலும், ஏரல் தாலுகா சாயர்புரத்திலும் நடக்கிறது.

இந்த முகாமில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு–இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளன.

எனவே பொதுமக்கள் இந்த முகாம்களில் மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story