சின்னசேலம் அருகே: விவசாயி, கார் மோதி பலி


சின்னசேலம் அருகே: விவசாயி, கார் மோதி பலி
x
தினத்தந்தி 29 Nov 2018 3:15 AM IST (Updated: 28 Nov 2018 11:48 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

சின்னசேலம், 

சின்னசேலம் அருகே உள்ள தென்செட்டியந்தல் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராமர் (வயது 56), விவசாயி. நேற்று இவர் அதே பகுதியில் உள்ள தனது விளை நிலத்தில் காய்கறிகளை பறித்துக் கொண்டு, அதனை விற்பனை செய்வதற்காக சின்னசேலத்துக்கு மொபட்டில் சென்றார்.

அங்கு அவர் காய்கறிகளை விற்பனை செய்து விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். சின்னசேலம் அருகே கனியாமூர்- கச்சிராயப்பாளையம் சாலையில் சென்ற போது, பின்னால் வந்த கார் ஒன்று, ராமர் ஓட்டிச்சென்ற மொபட் மீது மோதியது.

இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராமர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான ராமரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ராமரின் அண்ணன் கலியன்(60) சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story