அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
மன்னார்குடி அருகே குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுந்தரக்கோட்டை,
மன்னார்குடி அருகே உள்ள கர்ணாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட தேவேந்திரபுரம் பகுதி மக்கள் கஜா புயல் பாதிப்புக்கு பிறகு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த பகுதியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு நேற்று அப் பகுதி மக்கள் மன்னார்குடி மேலப்பாலத்தில் சாலையில் மரக்கிளைகளை போட்டு காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் மன்னார்குடி-கும்பகோணம் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூத்தாநல்லூர் அருகே உள்ள அரிச்சந்திரபுரம் ஊராட்சி பகுதியில் கஜா புயலால் ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்து விட்டதால் மின்வினியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
எனவே உடனடியாக மின்வினியோகம் செய்யக்கோரி நேற்று அரிச்சந்திரபுரம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைப்போல வடவேற்குடி கிராம மக்கள் குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் வடபாதிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர், மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வடபாதிமங்கலம்- சேந்தங்குடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story