அரியலூர் அரசு மருத்துவமனையில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை


அரியலூர் அரசு மருத்துவமனையில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 29 Nov 2018 3:45 AM IST (Updated: 29 Nov 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

நோயின் கொடுமையால் மனவேதனை அடைந்த லட்சுமணன் நேற்று அதிகாலை மருத்துவமனை கழிப்பறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்,

பெரம்பலூர் மாவட்டம் ராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 60). விவசாயி. இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதையடுத்து கடந்த 18-ந்தேதி அரியலூர் அரசு மருத்துவமனையில் லட்சுமணன் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். நோயின் கொடுமையால் மனவேதனை அடைந்த லட்சுமணன் நேற்று அதிகாலை மருத்துவமனை கழிப்பறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து வந்த அரியலூர் போலீசார் லட்சுமணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத கூடத்திற்கு அனுப்பினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story