மீட்பு பணிக்கு வந்த பணியாளர்கள் நலனில் முழு கவனம் செலுத்தப்படுகிறது அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
பிற மாநில, மாவட்டங்களிலிருந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் நலனில் முழு கவனம் செலுத்தப்படுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலினால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்ட ஆலங்குடி பகுதிகளில் மீட்பு பணி முன்னேற்றம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-
கஜா புயலினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட தீவிர மீட்பு பணிகளின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. ஆலங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வடகாடு பகுதிகளிலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு புயலால் சேதமடைந்த நோட்டு, புத்தகங்களுக்கு பதிலாக விலையில்லா புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.
மின்சாரம், தூய்மை பணிகளை மேற்கொள்ள வெளி மாநிலம், மாவட்டங்களிலிருந்து வந்த பணியாளர்கள் மட்டுமல்லாது பல்வேறு துறைகளின் சார்பில் பணியாளர்கள் மீட்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வெளியூர் பணியாளர்கள் தங்கியுள்ள இடங்களில் இரவு நேரங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுவதுடன் மின்பணியாளர்களுக்கு தடுப்பூசியும் போடப்படுகிறது.
இதேபோல் வெளியூர் பணியாளர்களுக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம், குடிநீர்வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்புடன் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற மாநில மற்றும் மாவட்டங்களிலிருந்து வருகை தந்து பணியாற்றி வரும் பணியாளர்களின் நலனில் முழுகவனம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கோவில்பட்டி கிராமத்தில் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்து மின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு மதிய உணவினை பரிமாறினார்.

Related Tags :
Next Story