மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் விழாவில் ரூ.37 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
காதப்பாறை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் விழாவில், ரூ.37¼ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் அன்பழகன் வழங்கினார்.
கரூர்,
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா காதப்பாறை ஊராட்சியில் நேற்று மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் விழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் கலந்து கொண்டு, 320 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அங்கு வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வாயிலாக சிறு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் துறை சார்ந்த திட்டங்கள் பற்றி அந்தந்த துறை அதிகாரிகள் விளக்கி கூறினர்.
விழாவில் கலெக்டர் பேசும்போது, “டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்விரு காய்ச்சல்களும் நம்முடைய கவனக்குறைவின் காரணமாகவே நம்மை தாக்குகிறது. அரசு வேலை எதிர்பார்ப்பவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் கட்டணமில்லாமல் நடத்தப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையப் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். இவை தவிர வாரந்தோறும் நடத்தப்படும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு தகுதிக்கேற்ற வேலைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். கால்நடைகளுக்கு தீவனம் பயிர் செய்வதற்காக 2,500 ஏக்கர் மானாவாரி நிலப்பரப்பில் சாகுபடி செய்ய ரூ.20 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் 40 டன் விதைகள் முழு மானியமாக கரூர் மாவட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
இந்த முகாமில் பெறப்பட்ட 313 மனுக்களில் 300 மனுக்கள் ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் (குளித்தலை) லியாகத், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மீனாட்சி, வேளாண் இணை இயக்குனர் ஜெயந்தி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் இளங்கோவன், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை துணை இயக்குனர் சுப்பையா, ஆதிதிராவிட நல அதிகாரி லீலாவதி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி கவிதா, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி விஜயா, தாசில்தார் (மண்மங்கலம்) ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story