அடிப்படை வசதி கோரி உண்ணாவிரதம்


அடிப்படை வசதி கோரி உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 29 Nov 2018 4:00 AM IST (Updated: 29 Nov 2018 3:51 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதி செய்து தரக்கோரி உண்ணாவிரதம் நடைபெற்றது.

விருதுநகர்,

விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியில் தெருவிளக்கு, சாலை சீரமைப்பு போன்ற அடிப்படை வசதி கோரி அனைத்து கட்சியினர் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விருதுநகர் ஒன்றிய செயலாளர் முத்து வேல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள் கட்சிகள் கலந்து கொண்டன. விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தை வாழ்த்தி பேசினர்.

Next Story