மாநகர பஸ்களுக்கு இடையில் சிக்கி கல்லூரி பெண் ஊழியர் பலி; பஸ் டிரைவர் கைது


மாநகர பஸ்களுக்கு இடையில் சிக்கி கல்லூரி பெண் ஊழியர் பலி; பஸ் டிரைவர் கைது
x
தினத்தந்தி 29 Nov 2018 4:34 AM IST (Updated: 29 Nov 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

மாநகர பஸ்களுக்கு இடையில் சிக்கி தனியார் கல்லூரி பெண் ஊழியர் பலியானார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை கொத்தவால்சாவடி தெருவை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 52). இவருடைய மனைவி வள்ளி (48). சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்தார்.

இவர் கல்லூரிக்கு செல்வதற்காக சைதாப்பேட்டையில் இருந்து தியாகராயநகர் பஸ் நிலையத்துக்கு கணவர் சகாதேவனுடன், மோட்டார் சைக்கிளில் வந்தார். மோட்டார் சைக்கிளில் இருந்து வள்ளி இறங்கி பஸ் நிலையத்துக்குள் சென்றார். அப்போது பஸ் நிலையத்துக்குள் ஒன்றன் பின் ஒன்றாக மாநகர பஸ்கள் நின்று கொண்டு இருந்தது.

அதில் தியாகராயநகர்-கண்ணகிநகர் நோக்கி செல்வதற்கு நின்றிருந்த மாநகர பஸ்சுக்கும் (வழித்தட எண் 5 ஜி), மற்றொரு மாநகர பஸ்சுக்கும் இடையே கடந்து செல்ல முயற்சித்தார்.

அந்த நேரத்தில் தியாகராயநகர்-கண்ணகிநகர் செல்ல வேண்டிய பஸ் திடீரென்று புறப்பட்டது. அந்த பஸ்சின் டிரைவர் கண்ணபிரான், வள்ளி கடந்து செல்வதை பார்க்காமல் பஸ்சை நகர்த்தினார். 2 பஸ்களுக்கு இடையில் வள்ளி சிக்கிக்கொண்டு துடிதுடிக்க பலியானார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் கண்ணபிரானை கைது செய்தனர்.

Related Tags :
Next Story