நடிகர் அம்பரீசுக்கு கன்னட ரத்னா விருது வழங்கப்படும் : முதல்-மந்திரி அறிவிப்பு


நடிகர் அம்பரீசுக்கு கன்னட ரத்னா விருது வழங்கப்படும் : முதல்-மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Nov 2018 4:55 AM IST (Updated: 29 Nov 2018 4:55 AM IST)
t-max-icont-min-icon

மைசூருவில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்-மந்திரி குமாரசாமி ஹாசனில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மைசூரு லலிதாமகால் ஹெலிபேடு மைதானத்திற்கு வந்தார்.

மைசூரு,

குமாரசாமி அங்கு  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். கல்வி தரத்தை மேம்படுத்த நான் முயற்சி செய்து வருகிறேன். கல்வியில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளேன். இதுபற்றி துணைவேந்தர்களின் கருத்துக்களை கேட்டறிய வந்துள்ளேன். அந்த கருத்துக்கள் அடிப்படையில் விரைவில் கல்வியில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்.

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. இதற்கு மத்திய அரசு வழங்கும் மானியம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் சீருடைகளை வழங்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மாநிலத்தில் நிலவும் வறட்சியால் விவசாய பயிர்கள் கருகியுள்ளன. இதனால் வறட்சி நிவாரண நிதியாக ரூ.16 ஆயிரம் கோடி வழங்க பிரதமர், மத்திய மந்திரியிடம் நேரில் கடிதம் வழங்கியுள்ளேன். ஆனால் இன்னும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இருப்பினும் மாநில அரசு ஒதுக்கிய நிதியில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடிகர் அம்பரீஷ் இறுதிச்சடங்குக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு சார்பில் செய்யப்பட்டு இருந்தது. அவர் சிறந்த மனிதர். அவருக்கு அரசு சார்பில் கன்னட ரத்னா விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story