கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
6 உறுப்பினர்கள்தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்த ஆதரவற்றோர், ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் வயதான பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சுயதொழில் மூலம் வருமானம் பெற வழிவகை செய்வதற்காக, சிறுதொழில் தொடங்க தூத்துக்குடி மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் அமைக்கப்பட உள்ளது.
இந்த சங்கத்துக்கு ஒரு கவுரவ செயலாளர், 2 இணைச்செயலாளர்கள் மற்றும் 3 உறுப்பினர்கள் என 6 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பம்இந்த பொறுப்பிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்களில் சமூக பணிக்கு எவ்வித புகார்களுக்கும் இடமின்றி ஆர்வமுடன் செயல்படுபவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்கள் மீது எவ்வித குற்றவியல் நடவடிக்கைகளும், நீதிமன்ற வழக்குகளும் நிலுவையில் இருக்கக்கூடாது. அவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக தேர்வு செய்யப்படுவர். விருப்பம் உள்ளவர்கள் தங்கள் முழு விவரம் மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 10–ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.