சோழிங்கநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்


சோழிங்கநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 30 Nov 2018 4:00 AM IST (Updated: 29 Nov 2018 10:33 PM IST)
t-max-icont-min-icon

சோழிங்கநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

சோழிங்கநல்லூர்,

முகாமிற்கு சோழிங்கநல்லூர் தாசில்தார் நிர்மலா முன்னிலை வகித்தார். துணை தாசில்தார் ஜெயந்தி வரவேற்றார். இதில் தென்சென்னை தெற்கு மண்டல வருவாய் ஆர்.டி.ஓ. நாராயணன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். முகாமில் முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, புதிய பட்டா, பட்டா பெயர் மாற்றம் கேட்டு பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். இதில் ஒரு சில மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டன.

முகாமில் செம்மஞ்சேரி எழில்முகநகர் மற்றும் ஜவஹர்நகர் பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு பட்டா கேட்டு அம்பேத்கர் பொதுநலச்சங்கம் சார்பில் தனசேகர் மற்றும் செம்மஞ்சேரி முத்துகிருஷ்ணன் மற்றும் அந்த பகுதி மக்கள் சார்பில் ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுத்தனர்.

மேலும் இந்த பகுதியில் இருந்து பள்ளிக்கூடம் செல்ல மாணவ-மாணவிகள் நீண்ட தூரம் நடந்து செல்லும் சூழல் உள்ளதால் இந்த பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுக்கப்பட்டது. முகாமில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story