மாவட்ட செய்திகள்

திருச்செங்கோட்டில்பெண்ணிடம் நகை பறிப்புமர்ம ஆசாமிக்கு வலைவீச்சு + "||" + In tiruccenkot Jewelry flush with the girl The mystery of mystery

திருச்செங்கோட்டில்பெண்ணிடம் நகை பறிப்புமர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

திருச்செங்கோட்டில்பெண்ணிடம் நகை பறிப்புமர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
திருச்செங்கோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்செங்கோடு, 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனியில் வசித்து வருபவர் தீபா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கார் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் தீபா வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு இரவில் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகில் சென்ற போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் மர்ம ஆசாமி ஒருவர் வந்தார். அந்த நேரம் அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் தீபாவின் கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் நகையை பறித்து கொண்டு அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தீபா இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நடந்து சென்ற பெண்ணிடம் மர்ம ஆசாமி நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஓசூர் பகுதியில் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
ஓசூர் பகுதியில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
2. வீரபாண்டி பகுதியில், பெண்களிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் பிடிபட்டனர்
வீரபாண்டி பகுதியில் பெண்களிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
3. மேல்செங்கத்தில் அடுத்தடுத்த வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த 5 பெண்களிடம் நகை பறிப்பு நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் கைவரிசை
மேல்செங்கத்தில் அடுத்தடுத்த வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த 5 பெண்களிடம் கொள்ளையர்கள் நகைகளை பறித்துக்கொண்டு ஓடிய சம்பவம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
4. திருவண்ணாமலையில் 2 பெண்களிடம் நகை பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
திருவண்ணாமலையில் வெவ்வேறு பகுதிகளில் 2 பெண்களிடம் நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
5. சோழவந்தான் அருகே பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் நகை பறிப்பு
சோழவந்தான் அருகே பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் 7 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.