குன்னூர் அருகே: விவசாய பயிர்களை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம்


குன்னூர் அருகே: விவசாய பயிர்களை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 30 Nov 2018 3:30 AM IST (Updated: 30 Nov 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே விவசாய பயிர்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.

குன்னூர்,


குன்னூர் அருகே தூதூர்மட்டம், மஞ்சக்கம்பை, மேலூர் ஒசட்டி, ஒடயரட்டி, கெரடாலீஸ், டெரேமியா போன்ற குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகளாக இருக்கின்றனர். மேற்கண்ட பகுதிகள் குந்தா வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பகுதிகளில் தேயிலை தோட்டங்களும், விளை நிலங்களும் அதிகளவில் உள்ளன. இங்குள்ள தோட்டங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. மேற்கண்ட பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படாததால், முட்புதர்கள் சூழ்ந்து காடு போல காட்சி அளிக்கின்றன. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது.

இந்த நிலையில் மஞ்சூர் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய 3 காட்டுயானைகள் ஒடயரட்டியில் முகாமிட்டன.

நேற்று முன்தினம் மாலை டெரேமியா பகுதியில் புகுந்து, அங்குள்ள தோட்டத்தில் மேரக்காய், பீன்ஸ் பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதன் சேத மதிப்பு ரூ.6 லட்சம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து காட்டுயானைகள் அங்கேயே முகாமிட்டு இருப்பதால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story