கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மரங்களை அகற்றுவதற்காக 300 எந்திரங்கள் அமைச்சர் வழங்கினார்
கஜா புயலால் சேதம் அடைந்த மரங்களை அகற்றுவதற்காக 300 மரம் அறுக்கும் எந்திரங்களை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கஜா புயலால் சேதமடைந்த மரங்களை போர்க்கால அடிப்படையில் அகற்றுவதற்காக சேலம் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட 300 மரம் அறுக்கும் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த எந்திரங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், விவசாயிகள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தாலுகாவில் தென்னை மரங்கள், தேக்கு மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் சாய்ந்துள்ளன. சாய்ந்துள்ள மரங்களால் தடைப்பட்டுள்ள மின் வினியோகத்தை சீர் செய்யும் வகையில் போர்க்கால அடிப்படையில் மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
மேலும், தனியார் நிலங்களில் சாய்ந்துள்ள தென்னை மரங்கள், வயல் வெளிகளில் சாய்ந்துள்ள மற்ற மரங்களை அகற்றும் வகையில் 300 எண்ணிக்கையிலான மரம் அறுக்கும் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, மரம் அறுக்கும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
மேலும், அதிக எண்ணிக்கையில் மரங்கள் சாய்ந்துள்ள காரணத்தினால் அவற்றை போர்க்கால அடிப்படையில் அகற்றுவதற்காக கூடுதலாக மேலும் 300 மரம் அறுக்கும் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்படவுள்ளன. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் சாய்ந்துள்ள மரங்கள் போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டு இயல்பு நிலை திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, வைத்திலிங்கம் எம்.பி., கலெக்டர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story