மேகதாதுவில்: அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருந்தால் கண்டிக்கத்தக்கது - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
மேகதாதுவில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது என மதுரையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தமிழக துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம், சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
மதுரை,
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிதாக அணை கட்ட வேண்டுமென்றால் கீழ்ப்பகுதியில் உள்ள தமிழகத்தின் அனுமதியை பெற வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது.
இதை அறியாமல், மத்திய அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு அனுமதி அளித்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது. அதை மீறி அணை கட்டினால் அது வன்மையான கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
“இது தொடர்பாக சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறாரே?“ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் பதில் ஏதும் அளிக்காமல் சென்றுவிட்டார்.
Related Tags :
Next Story