4 சிறுமிகளை மானபங்கம் செய்த சலவை தொழிலாளிக்கு 7 ஆண்டு ஜெயில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு


4 சிறுமிகளை மானபங்கம் செய்த சலவை தொழிலாளிக்கு 7 ஆண்டு ஜெயில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 Nov 2018 6:03 AM IST (Updated: 30 Nov 2018 6:03 AM IST)
t-max-icont-min-icon

4 சிறுமிகளை மானபங்கம் செய்த சலவை தொழிலாளிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

மும்பை,

மும்பை, மேற்கு புறநகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 30). சலவை தொழிலாளி. இவர் சலவைக்கு துணி வாங்க செல்லும் போது வீடுகளில் தனியாக இருக்கும் சிறுமிகளை மானபங்கம் செய்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் மீது 4 சிறுமிகள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தோசை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அவர் மீது மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது, சலவை தொழிலாளி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.

இதையடுத்து தீர்ப்பு கூறிய கோர்ட்டு சலவை தொழிலாளிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

Next Story