பருவ காலம் தொடங்குவதற்கு முன்பு அனைத்து ஏரி, கால்வாய்களை தூர்வார வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


பருவ காலம் தொடங்குவதற்கு முன்பு அனைத்து ஏரி, கால்வாய்களை தூர்வார வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 1 Dec 2018 4:30 AM IST (Updated: 30 Nov 2018 8:04 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி ஆரஞ்ச் பிரிட்டிஷ் அகாடமி பள்ளிக்கு சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆரணி,

ஆரணி – சேத்துப்பட்டு ரோட்டில் ஆரஞ்சு பிரிட்டிஷ் அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்துக்கான அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது.

இதையொட்டி தாளாளர் கே.சிவக்குமார், துணை தாளாளர் அபர்ணாசிவக்குமார் ஆகியோர் மத்திய அரசால் வழங்கப்பட்ட அங்கீகார ஆணையை பள்ளி வளாகத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து குத்து விளக்கேற்றி வழிபட்டனர்.

தொடர்ந்து 2018–19–ம் கல்வியாண்டிற்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் மாணவர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பள்ளியின் டீன் அரசப்பன், முதல்வர் பிரபு மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

இதுகுறித்து பள்ளியின் தாளாளர் சிவக்குமார் கூறியதாவது:–

கிராமப்புற மாணவர்களுக்கு உயர்ந்த கல்வியை சிறந்த முறையில் வழங்க வேண்டும் என்பது எங்கள் லட்சியம். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்க மத்திய அரசு எங்கள் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது.

இங்கு சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் இயற்கைசூழல் நிறைந்த பகுதியில் பள்ளி அமைந்துள்ளது. இங்கு நவீன கருத்தரங்கு கூடம், முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய வகுப்பறைகள், அனைத்து வகுப்பறைகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது, ஒலிபெய்டு, விவிஎம், ஆன்லைன் போட்டி தேர்வுகள், தனித்திறமை போட்டிகள் நடத்தப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி, மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. 2018–19–ம் கல்வியாண்டிற்கான சேர்க்கை இப்போதே தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story