ஆரணி நகராட்சி வளாகத்தில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்க இடம் தேர்வு அமைச்சர் பார்வையிட்டார்


ஆரணி நகராட்சி வளாகத்தில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்க இடம் தேர்வு அமைச்சர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 30 Nov 2018 10:30 PM GMT (Updated: 30 Nov 2018 3:42 PM GMT)

ஆரணி நகராட்சி வளாகத்தில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பார்வையிட்டு கடைகளை அளவீடு செய்து வழங்கினார்.


ஆரணி, 


ஆரணி, காந்தி ரோட்டில் காய்கறி மார்கெட் கடந்த 1980-ம் ஆண்டு கட்டப் பட்டது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 3 கடைகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 24-ந் தேதி மீண்டும் 6 கடைகளின் மேற் கூரைகள் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதமின்றி வியாபாரிகள் தப்பினர்.

தற்போது நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக அதே இடத்தில் 127 காய்கறி கடைகள் அமைக்க பழைய கடைகள் அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

புதிதாக காய்கறி வணிக வளாகம் அமைக்க ரூ.2 கோடியே 37 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடுகள் செய்யப் பட்டு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஒப்புத லுடன் முதல்-அமைச்சர் பார்வைக்கு அனுப்பப் பட்டுள்ளது.

விரைவில் பணிகள் தொடங் கப்பட உள்ள நிலையில் நகராட்சி காய்கறி வணிக வளாகத்தில் அமைந்துள்ள கடைக்காரர்களின் வாழ்வா தாரம் மேம்பட அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் தற்காலிக காய்கறி மார்கெட் அமைக்க 3 இடங் களை தேர்வு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று நகராட்சி வளாக பின்பகுதியில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்க வியாபாரிகள் ஒப்பு தலுடன் இடம் தேர்வு செய்யப் பட்டது.

தேர்வு செய்யப்பட்ட இடத்தை நகராட்சி ஆணை யாளர் அசோக்குமார், பொறி யாளர் கணேசன், அலுவலக மேலாளர் நெடுமாறன், உதவி பொறியாளர் தேவநாதன், வரு வாய் ஆய்வாளர் தேவராஜ் மற்றும் ஊழியர்கள் பொக் லைன் எந்திரம் மூலம் சரி செய்தனர்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தற்காலிக கடைகள் அமையும் இடத்தை பார்வையிட்டார். பின்னர் 104 காய்கறி வியாபாரிகளுக்கும் கடைகளை அளவீடு செய்து காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் சாதிக்பாஷா, முன் னாள் தலைவர் சுபானி, செய லாளர் பி.மோகன், பொரு ளாளர் சங்கர்கணேஷ் ஆகி யோரிடம் ஒப்படைத்தார்.

பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறிய தவாவது:-

நகராட்சிக்கு வாடகை செலுத்தி வந்த காய்கறி வியாபாரிகளின் வாழ்வா தாரம் காக்கவே வியாபாரிகள் ஒப்புதலோடு தற்காலிக கடைகள் அமைக்க இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள் ளது. அவர்களுக்கு இடமும் அளவீடு செய்து ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர்களாகவே கடைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் வசதிக்காக வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. இப்பணிகள் 2, 3 நாட்களில் செய்து முடிக்கப் படும்.

மேலும் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வாடகையை நகராட்சி நிர் வாகம் வசூலிக்கும். வண்டி மேடு பகுதியில் தற்போது அமைந்துள்ள காய்கறி கடை களை அகற்றிவிட வேண்டும் அப்போதுதான் புதிதாக அமைக்கப்பட உள்ள கடை கள் மிக விரைவில் கட்டி முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் பாரி பி.பாபு, கூட்டுறவு சங்கத் தலைவர்கள், அரசு அலுவலர்கள், காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Next Story