கூடங்குளம் அணு மின்நிலைய வளாக இயக்குனர் பொறுப்பேற்பு
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனராக இருந்த டி.எஸ்.சவுத்ரி, இந்திய அணுசக்தி கழக இயக்குனராக (செயலாக்கம்) மாற்றப்பட்டார்.
வள்ளியூர்,
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனராக இருந்த டி.எஸ்.சவுத்ரி, இந்திய அணுசக்தி கழக இயக்குனராக (செயலாக்கம்) மாற்றப்பட்டார்.
இதனை தொடர்ந்து நிலைய இயக்குனராக இருந்த சுரேஷ்குமார் பிள்ளை, வளாக இயக்குனராக கூடுதல் பொறுப்பு பதவி வகித்து வந்தார். இந்நிலையில் கர்நாடக மாநிலம் கைகா அணுமின் நிலைய வளாக இயக்குனராக பணியாற்றி வந்த சஞ்சய்குமார், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை இந்திய அணுசக்தி கழக தலைவரும், நிர்வாக இயக்குனருமான எஸ்.கே.சர்மா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனராக சஞ்சய்குமார் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இவர் பி.டெக் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு உத்தரபிரதேசத்தில் உள்ள நரோரா அணுமின் நிலையத்தில் பணியை தொடங்கியுள்ளார். 13 ஆண்டுகள் நரோரா அணுமின் நிலையத்தில் பணியாற்றிய பின்பு ராஜஸ்தான் அணுமின் நிலையத்திலும் வேலை பார்த்துள்ளார்.
கடந்த 2012–ம் ஆண்டு கைகா அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4–வது அலகில் தலைமை கண்காணிப்பாளராகவும், 2013–ம் ஆண்டு நிலைய இயக்குனராக பணியாற்றிய நிலையில் கடந்தாண்டு கைகா அணுமின் நிலைய வளாக இயக்குனராக பணியாற்றினார். இதனை தொடர்ந்து தற்போது கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனராக நேற்று முன்தினம் அவர் பொறுப்போற்றார். அவருக்கு அணுமின் நிலைய அதிகாரிகளும், ஊழியர்களும், ரஷ்ய விஞ்ஞானிகளும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த தகவலை மனிதவள மேம்பாட்டு முதுநிலை மேலாளர் தேவபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story