கழிவு பொருட்களுடன் பிடிபட்ட 17 லாரிகள் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன அதிகாரிகள் நடவடிக்கை
செங்கோட்டை அருகே கழிவு பொருட்களுடன் பிடிபட்ட 29 லாரிகளில், உரிமையாளர்கள் அபராதம் செலுத்திய 17 லாரிகள் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
செங்கோட்டை,
செங்கோட்டை அருகே கழிவு பொருட்களுடன் பிடிபட்ட 29 லாரிகளில், உரிமையாளர்கள் அபராதம் செலுத்திய 17 லாரிகள் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
கழிவுகள் ஏற்றி வந்த லாரிகள்
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே தமிழக– கேரள எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடியில் கடந்த வாரம் கழிவு பொருட்களுடன் 29 லாரிகள் பிடிபட்டன. அவற்றை புளியரை போலீசார் கைப்பற்றி, சுகாதாரத்துறை வசம் ஒப்படைத்தனர். இதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில் மருத்துவ கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் இருந்ததையடுத்து 29 லாரிகளுக்கும் ரூ.16½ லட்சம் அபராதம் விதித்தனர். இதில் 17 லாரிகளின் உரிமையாளர்கள் அபராத தொகையை செலுத்தினர்.
திருப்பி அனுப்பப்பட்டன
மேலும் 29 லாரிகளும் கடந்த 8 நாட்களாக தனியாருக்கு சொந்தமான நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீசாரின் தீவிர முயற்சிக்கு பின்னர், அபராத தொகை செலுத்திய 17 லாரிகளையும் கழிவு பொருட்களுடன் நேற்று முன்தினம் இரவு கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும் மீதமுள்ள லாரிகளும் அபராத தொகை செலுத்திய பின்னர் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story