திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்; 5 பேர் கைது
திருவள்ளூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த பாண்டூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு மினிடெம்போவை போலீசார் கைப்பற்றினர்.
அதை ஓட்டி வந்த பாண்டூரை சேர்ந்த ராபின்ராஜ் என்கிற சின்னராஜ் (வயது 22) மற்றும் உடன் வந்த அதேபகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (39), முகில்(22) ஆகியோரை கைது செய்தார்கள்.
அதேபோல திருவள்ளூரை அடுத்த மப்பேடு போலீசார் நேற்று முன்தினம் தொடுகாடு காலனி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதை ஓட்டி வந்த தொடுகாட்டை சேர்ந்த பிரபு (37), உடன் இருந்த லோகநாதன் (45) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story