லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; பல்கலைக்கழக மாணவர் பலி


லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; பல்கலைக்கழக மாணவர் பலி
x
தினத்தந்தி 1 Dec 2018 3:30 AM IST (Updated: 1 Dec 2018 12:02 AM IST)
t-max-icont-min-icon

லாரி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பல்கலைக்கழக மாணவர் பலியானார்.

மாமல்லபுரம்,

சென்னை தாம்பரத்தை அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ரோட்ரிக்ஆண்டனி (வயது 18). இவர் கானத்தூரில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர் தன்னுடன் படிக்கும் மாணவியுடன் மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரத்திற்கு சென்றார்.

தேற்குப்பட்டு என்ற இடத்தில் செல்லும்போது இவரது மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் சென்ற லாரியின் டிரைவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது ரோட்ரிக்ஆண்டனி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் லாரியின் பின்புறம் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ரோட்ரிக்ஆண்டனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடன் வந்த மாணவி படுகாயம் அடைந்தார். அவர் கேளம்பாக்கதில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story