பதவி உயர்வு கிடைக்காததால் பெண் என்ஜினீயர் தற்கொலை


பதவி உயர்வு கிடைக்காததால் பெண் என்ஜினீயர் தற்கொலை
x
தினத்தந்தி 1 Dec 2018 3:15 AM IST (Updated: 1 Dec 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

வேலை பார்த்த நிறுவனத் தில் பதவி உயர்வு கிடைக் காததால் மனம் உடைந்த பெண் என்ஜினீயர், தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தாம்பரம்,

சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் சரோஜினி தெருவில் வசித்து வந்தவர் நித்யா (வயது 25). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், பெருங்களத்தூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

தர்மபுரியை சேர்ந்த நித்யா, தனது தோழிகளுடன் வீடு எடுத்து தங்கி, வேலைக்கு சென்று வந்தார். நித்யா வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் அவருக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வை நிறுவனம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. அவருக்கு உடன் வேலை பார்த்த தோழிகள் ஆறுதல் கூறி வந்தனர்.

நேற்று முன்தினம் அவரது தோழிகள் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த நித்யா, திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த தோழிகள், நித்யா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பீர்க்கன்கரணை போலீசார், தற்கொலை செய்த நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story