மேகதாது திட்ட விவரங்களை தமிழக அரசுக்கு வழங்க தயார் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


மேகதாது திட்ட விவரங்களை தமிழக அரசுக்கு வழங்க தயார் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 1 Dec 2018 4:15 AM IST (Updated: 1 Dec 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

‘மேகதாது திட்ட விவரங்களை தமிழக அரசுக்கு வழங்க தயார்’ என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசு முதல்கட்ட அனுமதியை வழங்கியுள்ளது. அடுத்து விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு, மத்திய அரசிடம் தாக்கல் செய்யவுள்ளது.

இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெங்களூருவில் கர்நாடக நீர்ப்பாசனத் துறை மந்திரி டி.கே.சிவக் குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டம் குறித்த விவரங்களை தமிழக அரசுக்கு வழங்க தயார். ஆனால் தேவை இல்லாமல் தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. இந்த அணை கட்டுவதால், கர்நாடகத்தை விட தமிழகத்திற்கு தான் அதிக நன்ைம கிடைக்கும். இதை தமிழகம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுதொடர்பாக தமிழகம், கர்நாடக மாநில முதல்-மந்திரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசுக்கு நாங்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளோம். பெங்களூருவில் வருகிற 6-ந் தேதி இதுகுறித்து விவாதிக்க முன்னாள் முதல்-மந்திரிகள் மற்றும் முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதில் இந்த திட்டம் குறித்து விரிவான முறையில் விவாதித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.

Next Story