பெரம்பலூர் அருகே விவசாயி வீட்டை சூறையாடிய 33 பேருக்கு சிறை தண்டனை
பெரம்பலூர் அருகே விவசாயி வீட்டை சூறையாடிய 33 பேருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ரெங்கசாமி(வயது 64). விவசாயியான இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான ஆடுகளை அடைத்து வைக்கும் பட்டிக்கு அருகே ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன் கூடிய வீடு கட்டி வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி அதே கிராமத்தை சேர்ந்த துரைராஜ்(62), வெள்ளையன்(51), சங்கர்(46) உள்பட 33 பேர் உருட்டு கட்டை, கடப்பாரை ஆகியவற்றுடன் சென்று ரெங்கசாமியின் வீட்டை சூறையாடினர். மேலும், அவரது மனைவியை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து ரெங்கசாமி அளித்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு விசாரணை பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நீதிபதி விஜயகாந்த் நேற்று இறுதி விசாரணை நடத்தி தீர்ப்பு அளித்தார். ரெங்கசாமி வீட்டை இடித்து பொருட் களை சேதப்படுத்தியதாக 33 பேருக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story