சீரமைப்பு பணி தாமதம்: புயலால் சேதமடைந்த அரசு பள்ளி கிராம சேவை மையத்தில் இயங்குகிறது
புயலால் மரங்கள் விழுந்து சேதமடைந்த கொத்தமங்கலம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படாததால், கிராம சேவை மையத்தில் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
கீரமங்கலம்,
கஜா புயல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மரங்கள் விழுந்து சேதமடைந்துள்ளது. பல பள்ளிகளில் விழுந்து கிடந்த மரங்களை தீயணைப்பு வீரர்களும், தன்னார்வ இளைஞர்களும் வெட்டி அகற்றியதால் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. ஆனால் பல பள்ளிகளில் ஓட்டு கட்டிடங்களில் மரங்கள் விழுந்து ஓடுகள் உடைந்துள்ளதை இன்னும் சீரமைக்கவில்லை.
கீரமங்கலம் அருகே கொத்தமங்கலம் மேற்கு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 91 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கஜா புயல் தாக்கிய போது பள்ளி வளாகத்தில் நின்ற மரம் வகுப்பறைகள் கட்டிடத்தில் விழுந்து ஓடுகள் உடைந்து நொறுங்கியது. அந்த பகுதி இளைஞர்கள் மரங்களை வெட்டி அகற்றினார்கள். ஆனால் உடைந்த ஓடுகளை சீரமைக்க முடியவில்லை. அதனால் அந்த கட்டிடத்தில் வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் அருகில் உள்ள கிராம சேவை மையத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சத்துணவு சமைக்கவும், மாணவர்களுக்கு குடிநீர் வசதியும் இன்னும் வழங்கப்பட வில்லை. எனவே உடனடியாக பள்ளிக்கு சிமெண்டு கட்டிடமும், குடிதண்ணீர் வசதியும் ஏற் படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story