சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு - கலெக்டர் கதகவல்


சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு - கலெக்டர் கதகவல்
x
தினத்தந்தி 1 Dec 2018 4:48 AM IST (Updated: 1 Dec 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

தோட்டகலைத்துறை மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

சிவகங்கை,

கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–

 மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள் தங்கள் நீர்நிலை ஆதார நிலைக்கேற்ப விவசாயப் பணிகளை மேற்கொள்ள பல்வேறு வகையான தொழில் நுட்பங்களுடன் கூடிய உபகரணங்களையும் மற்றும் தேவையான பயிற்சிகளையும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

அந்த வகையில் தற்போது சொட்டு நீர் பாசனம் முறையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவிகிதம் மானியத்திலும், சொட்டுநீர் பாசன உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தங்கள் பகுதி நிலங்களுக்கு ஏற்ப தேவையான உபகரணங்களை விண்ணப்பித்து பயன் பெறலாம். இதன் மூலம் குறைந்த அளவு தண்ணீரை 3 பருவ சாகுபடி முறையில் மேற்கொள்ள இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். மேலும் பராமரிப்பு செலவுகளும் மிகக் குறைவு. விவசாயிகள் உற்பத்தி செய்ய வேண்டிய பயிர்கள் நன்றாக வளர்வதுடன் சரியான மகசூலும் கிடைப்பதால் விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்கும்.

தோட்டக்கலைத்துறையின் மூலம் புதிய வகை திசுவாழை கன்று வழங்கப்பட்டு வருகிறது. இது மற்ற வாழைப் பயிர்களை விட அதிக லாபம் தரக்கூடியதாகும். இந்த திசுவாழையில் அதிக அளவு வாழைக்காய் காய்ப்பதுடன், எடையும் அதிக அளவு இருக்கும். சந்தையிலும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் எளிதாக விற்பனை செய்ய முடியும். இந்த திசுவாழையையும் விவசாயிகள் அதிக அளவு பயிரிட்டு பயன்பெறலாம்.

அதேபோல் மா, பப்பாளி மற்றும் கொய்யா போன்ற பழக்கன்றுகள் மானியத் திட்டத்தில் வழங்கப்பட்டு அடர் நடவு முறையில் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு தேவையான பயிற்சிகளை தோட்டக்கலைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கு தோட்டக்கலைத்துறையின் மூலம் ரூ.10 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டு 1,500 எக்டேர் பரப்பளவில் பயிரிட்டு பயன்பெற விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உடனுக்குடன் உபகரணங்கள் பொருத்தப்பட்டு வருகிறது

மேலும் தேவையான விவசாயிகள் விண்ணப்பித்தால் உடனடியாக தோட்டக்கலைத்துறையின் மூலம் களஆய்வு மேற்கொண்டு உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சர்மிளா, உதவி இயக்குனர்கள் அழகுமலை, சக்திவேல், கதிரேசன் உள்பட அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story