காரைக்கால் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் மேம்படுத்தப்படும் - அமைச்சர் கந்தசாமி தகவல்
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்டம் அக்கரைவட்டத்தில் உள்ள தனியார் ஓட்டலில் புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் பருவநிலை மாற்றம் தொடர்பான பயிற்சிப் பட்டறை நேற்று நடந்தது. நபார்டு வங்கி துணை பொதுமேலாளர் மஷார் தலைமை தாங்கினார். கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ., கலெக்டர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அமைச்சர் கமலக்கண்ணன் கலந்து கொண்டார்.
பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து அமைச்சர் கந்தசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பருவமழை அல்லது காவிரி நீர் உரிய நேரத்தில் கிடைத்தால்தான் காரைக் கால் மாவட்டத்தில் விவசாயம் நன்றாக இருக்கும். இதுபோன்ற சூழல்களை மாற்ற, புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை மூலம் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறோம்.
குறிப்பாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் மேம்படுத்தப்படும். அதற்கான திட்டம் வகுத்து மத்திய அரசிடமிருந்து தேவையான நிதி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story