பூமிக்கு அடியில் ஆடம்பர ஓட்டல்!


பூமிக்கு அடியில் ஆடம்பர ஓட்டல்!
x
தினத்தந்தி 1 Dec 2018 4:42 PM IST (Updated: 1 Dec 2018 4:42 PM IST)
t-max-icont-min-icon

சீனாவில் பூமிக்கு அடியில் ஓர் ஆடம்பர நட்சத்திர ஓட்டல் திறக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பொதுவாக கைவிடப்பட்ட நிலக்கரி மற்றும் தங்கச்சுரங்கங்கள் பின்னர் மண்ணைக் கொட்டி நிரப்பப்பட்டு, சமன்படுத்தி வேறு வகையில் பயன்படுத்தப்படும் அல்லது அப்படியே கைவிடப்படும்.

ஆனால், சீனாவின் ஷாங்காய் நகரை ஒட்டிய கைவிடப்பட்ட ஒரு சுரங்கத்தில் ஓர் ஆடம்பர ஓட்டலை கட்ட கடந்த 2013-ம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது.

ஷாங்காய் நகரில் இருந்து சுமார் ஒருமணி நேர பயண தூரத்தில் தற்போது 17 மாடி கட்டிடமாக ‘இன்டர் கான்ட்டினென்டல் டிரீம்லேண்ட்’ என்ற பெயருடன் இந்த ஓட்டல் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.

தரைப் பகுதியில் இருந்து பல மீட்டர் ஆழத்தில் கட்டப் பட்டுள்ள இந்த ஓட்டல் சமீபத்தில் திறப்புவிழா கண்டது.

சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தீம் பார்க்குடன் உருவாகியுள்ள இந்த ஓட்டலில் 336 அறைகள் உள்ளன. இங்கு தங்குபவர்கள், மலையேற்றம், நீர்ச்சறுக்கு போன்றவற்றில் ஈடுபடலாம்.

இந்த ஓட்டலில் ஓர் இரவு தங்குவதற்கு குறைந்தபட்சக் கட்டணமாக 3 ஆயிரத்து 394 யுவான்கள் அதாவது, ரூ. 34 ஆயிரத்து 500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Next Story