தூத்துக்குடியில் 5–ந்தேதி நடக்கிறது ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு மவுன ஊர்வலம் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் முடிவு


தூத்துக்குடியில் 5–ந்தேதி நடக்கிறது ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு மவுன ஊர்வலம் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 2 Dec 2018 3:45 AM IST (Updated: 1 Dec 2018 6:16 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் வருகிற 5–ந்தேதி மவுன ஊர்வலம் நடத்துவது என்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி, 

ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் வருகிற 5–ந்தேதி மவுன ஊர்வலம் நடத்துவது என்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனை கூட்டம் 

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று மதியம் தூத்துக்குடியில் நடந்தது. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளர் சின்னத்துரை உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, வருகிற 5–ந்தேதி மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் மாவட்டம் முழுவதும் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். தமிழகம் திரும்பி பார்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி இருக்க வேண்டும் என்றார்.

தீர்மானங்கள் 

கூட்டத்தில், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா நினைவு தினம் வருகிற 5–ந்தேதி வர உள்ளது. இதையொட்டி அன்று காலை 10 மணிக்கு தூத்துக்குடி குரூஸ்பர்னாந்த் சிலை முன்பு இருந்து பழைய மாநகராட்சி அலுவலகம் வரை மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்துவது, அந்த ஊர்வலத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள வேண்டும், பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்க வேண்டும், மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியம், பகுதி, நகர, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழக நிர்வாகிகள் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story