எட்டயபுரத்தில் பரபரப்பு குடும்ப தகராறில் கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி


எட்டயபுரத்தில் பரபரப்பு குடும்ப தகராறில் கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி
x
தினத்தந்தி 2 Dec 2018 3:00 AM IST (Updated: 1 Dec 2018 7:44 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரத்தில் குடும்ப தகராறில் கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை மனைவி ஊற்றினார்.

எட்டயபுரம், 

எட்டயபுரத்தில் குடும்ப தகராறில் கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை மனைவி ஊற்றினார்.

ஜவுளிக்கடை உரிமையாளர் 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் கோட்டை மேல தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 48). இவர் எட்டயபுரம் மேல வாசல் தெருவில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளராக உள்ளார். இவருடைய மனைவி மீனாட்சி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இரவில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் மறுநாள் அதிகாலையில் மீனாட்சி தன்னுடைய குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதற்காக சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது முனியசாமி பல் துலக்கி கொண்டிருந்தார்.

கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 

அப்போது கணவன்–மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மீனாட்சி, அடுப்பில் அப்பளம் பொரிப்பதற்காக பாத்திரத்தில் கொதித்து கொண்டிருந்த எண்ணெயை எடுத்து கணவரின் மீது ஊற்றினார்.

இதனால் தலை, மார்பு, முதுகு, கைகள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்த முனியசாமி தனது காரில் ஏறி, கோவில்பட்டி தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story