சங்கரன்கோவில் அருகே மர்ம நோயால் 30–க்கும் மேற்பட்ட மாடுகள் சாவு

சங்கரன்கோவில் அருகே மர்ம நோயால் 30–க்கும் மேற்பட்ட மாடுகள் சாவு
x
தினத்தந்தி 2 Dec 2018 3:00 AM IST (Updated: 1 Dec 2018 8:41 PM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே உள்ள ராமநாதபுரத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு வாரத்தில் 30–க்கும் மேற்பட்ட மாடுகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு செத்தன.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் அருகே உள்ள ராமநாதபுரத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு வாரத்தில் 30–க்கும் மேற்பட்ட மாடுகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு செத்தன.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது,

மர்ம நோயால் தாக்கப்பட்ட மாடுகளுக்கு முதலில் காலில் புண் ஏற்படுகிறது. இதனால் மேய்ச்சலுக்கு செல்லாமல் அந்த மாடுகள் வீடுகளில் இருக்கின்றன. அந்த மாடுகளுக்கு மூக்கு மற்றும் வாயில் புண் ஏற்பட்டு நுரை தள்ளிய நிலையில் திடீரென இறந்து விடுகின்றன. மருந்துகள் கொடுத்தாலும் நோய் குணமாகவில்லை என்றார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
Next Story