கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.7½ லட்சம் நிவாரண பொருட்கள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.7½ லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ராசிபுரம்,
ஞானமணி கல்வி நிறுவனங்கள் மற்றும் ஞானோதயா இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ரூ.5 லட்சம் மதிப்புள்ள தார்ப்பாய், போர்வை, பாய், கொசுவலை, மெழுகுவர்த்தி, ரவை, பிஸ்கட், துணிகள் உள்பட பல்வேறு பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இந்த நிவாரண பொருட்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை அன்டமி கிராமம், வேதாரண்யம் நாலுவேதபடி, புஷ்பவனம், வெள்ள பள்ளம் போன்ற கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஞானமணி கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் இருந்து 2 பஸ்களில் கல்வி நிறுவனங்களின் தலைவர் அரங்கண்ணல், தாளாளர் மாலாலீனா ஆகியோர் அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஞானமணி கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி விவேகானந்தன், முதன்மை நிர்வாக அதிகாரி பிரேம்குமார், ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் கண்ணன், துணை முதல்வர் சந்திரமோகன், ஞானமணி ஒருங்கிணைந்த கல்வியியல் கல்லூரியின் முதல்வர் கவிதா, ஞானோதயா இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் ஆரோக்கியராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். ஞானமணி கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன பாண்டியன், அருணாசலம் மற்றும் மாணவர்கள் நேரடியாக சென்று நிவாரண பொருட்களை வழங்க உள்ளனர்.
ராசிபுரம் நகர தி.மு.க. இளைஞரணி சார்பில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அரிசி, தண்ணீர் பாட்டில்கள், பாய், போர்வை, குடம் உள்பட பல்வேறு பொருட்கள் சேகரிக்கப்பட்டு ராசிபுரத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் அனுப்பி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு ராசிபுரம் நகர இளைஞரணி அமைப்பாளர் கார்த்தி தலைமை தாங்கினார். இதில் துணை அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் ஜாபால் அலி, மற்றும் இளைஞரணி கனகராஜ், சதீஸ், பிரபு, வித்யாசாகர், சக்தி, லோகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கந்தம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை பள்ளியின் தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி, பொருளாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் வழங்கினர். இந்த நிவாரண பொருட்கள் பேராவூரணி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
மோகனூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சோழராஜன், சதாசிவம், நந்திவர்மன், சோலைராஜா, சரண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story