தகராறை விலக்கி விட்டவரை தாக்கியவருக்கு 7 ஆண்டு சிறை திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு


தகராறை விலக்கி விட்டவரை தாக்கியவருக்கு 7 ஆண்டு சிறை திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 2 Dec 2018 3:15 AM IST (Updated: 2 Dec 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

தகராறை விலக்கி விட்டவரை தாக்கியவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே கொமக்கம்பேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 65).இவர் கடந்த 3.4.2015 அன்று கடைக்கு சென்று விட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அதே தெருவில் வசித்து வரும் கஜேந்திரன் (55) என்பவர் தனது தந்தை பொன்னப்பனிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அவர்களுக்கு இடையேயான தகராறை தடுக்க குமார் முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கஜேந்திரன் குமாரை சரமாரியாக தாக்கினார். இதில் குமார் படுகாயம் அடைந்தார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இது குறித்து குமாரின் அண்ணன் காசி (70) வெங்கல் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

இந்த வழக்கு திருவள்ளூர் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி சாந்தி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். இதில், கஜேந்திரனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story