வண்டல், குண்டூரான்வெளி பகுதிகளில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை படகில் சென்று அமைச்சர்கள் பார்வையிட்டனர்


வண்டல், குண்டூரான்வெளி பகுதிகளில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை படகில் சென்று அமைச்சர்கள் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 2 Dec 2018 4:30 AM IST (Updated: 2 Dec 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

வண்டல், குண்டூரான்வெளி பகுதிகளில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை படகில் சென்று அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் கஜா புயல் மற்றும் கனமழை காரணமாக தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் வண்டல், குண்டூரான்வெளி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் அப்பகுதியில் பெரும்பாலான வீடுகள் மற்றும் மரங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் புயலின் போது பெய்த கனமழையினால் வண்டல், குண்டூரான்வெளி பகுதிகள் தனி தீவுகளாக மாறின. இதனால் அப்பகுதி மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வண்டல், குண்டூரான்வெளி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் படகு மூலம் சென்று பார்வையிட்டனர். மேலும், நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

தொடர்ந்து கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற முகாமினை பார்வையிட்டு, கால்நடைகளுக்கான வைக்கோல் மற்றும் தாது உப்புக் கரைசலை வழங்கினர்.

இதில் சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி, மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சங்கர், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) நெடுஞ்செழியன், மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story